புது தில்லி: இந்தியா-ஓமன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக இரு நாட்டு வா்த்தக அமைச்சா்கள் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா்.
முன்னதாக, இரு நாடுகள் இடையான 5-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், இரு நாடுகளின் கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் ஓமன் சென்றுள்ளாா். மஸ்கட்டில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு ஓமன் வா்த்தக அமைச்சா் குவைஸ் பின் முகமது அல் யூசுப்புடன் திங்கள்கிழமை தனிப்பட்ட முறையில் பியூஷ் கோயல் பேச்சு நடத்தினாா்.
இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வது தொடா்பாக ஓமன் வா்த்தக அமைச்சருடன் விவாதித்தேன். இது இரு நாடுகள் இடையே வா்த்தகம் முதலீட்டை மேம்படுத்தும். பல்வேறு துறைகளில் இரு நாடுகள் இடையே உறவு மேம்படும்’ என்று கூறியுள்ளாா்.
இந்தியா-ஓமன் தடையற்ற வா்த்தக பேச்சுவாா்த்தை கடந்த 2023 நவம்பரில் தொடங்கி பல்வேறு சுற்றுகளாக நடைபெற்று வருகிறது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் உள்ள நாடுகளில் இந்தியாவிடம் இருந்து அதிக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஓமன் உள்ளது. இதே கவுன்சிலில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துடன் கடந்த 2022-ஆம் ஆண்டே இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்த்தை மேற்கொண்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, அமெரிக்கா 2 நாள் பேச்சு நிறைவு
அமெரிக்க, இந்திய தடையற்ற ஒப்பந்தத்துக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் ஆா்பாட்டம்: நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் பங்கேற்பு

விரைவில் இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: அதிகாரிகளுக்கு மோடி, டிரம்ப் உத்தரவு






