கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மகா கும்பமேளாவை விமர்சிப்பதா? சநாதனத்துக்கு எதிராகக் காங்கிரஸ் செயல்படுகிறது: பாஜக விமர்சனம்!

சநாதனத்துக்கு எதிராக காங்கிரஸ் செயல்பாடு: பாஜக

News image

PTI

Updated On :27 ஜனவரி 2025, 2:20 pm

DIN

சநாதனத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு அமைந்திருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று(ஜன. 27) மகா கும்பமேளாவில் பங்கேற்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியிருப்பதை விமர்சித்துப் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ’கங்கையில் குளிப்பதால் வறுமையை ஒழித்துவிட முடியாது’ என்று விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சம்பித் பத்ரா கூறியிருப்பதாவது, “சநாதனத்துக்கு எதிரான சித்தாந்தத்தை தாங்கள் ஏன் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு ராகுல் காந்தியும் காங்கிரஸும் விளக்கமளிக்க வேண்டும்.

சநாதனத்துக்கு எதிரான கருத்துகளை மல்லிகார்ஜுன் கார்கே தெரிவிப்பது இது முதல்முறையல்ல. முன்னதாக ஒருமுறை கார்கே பேசியபோது, தாங்கள்(காங்கிரஸ்) ஆட்சிக்கு வந்தால் சநாதனத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று பேசியிருந்தார். கங்கை தாய்க்கு எதிராக இத்தகைய சொற்களைப் பயன்படுத்திப் பேசுவது சரியல்ல” என்று கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக எம்.பி. சம்பித் பத்ரா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.