தில்லி மக்களுடன் ராகுல் காந்தி!

புதுதில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களைச் சந்திக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
தில்லி மக்களுடன் ராகுல் காந்தி!
Published on
Updated on
1 min read

புதுதில்லி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வால்மீகி கோயிலில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வழிபாடு செய்தார். பின்னர் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்குப் பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக என இந்த தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதையொட்டி கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று புதுதில்லி தொகுதியில் உள்ள வால்மீகி கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.

அதன்பின்னர் அப்பகுதியில் உள்ள மக்களுடன் உரையாடி வருகிறார்.

தேர்தலையொட்டி இன்று தில்லியின் பட்பர்கஞ்ச், ஓக்லா ஆகிய தொகுதிகளில் பேரணி நடத்தவுள்ளார்.

புது தில்லி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீட்சித்துக்கு வாக்கு சேகரிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com