தில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் பிரசாரம்!

தில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் பிரசாரம்...
கேஜரிவாலுடன் மமதா பானர்ஜி..
கேஜரிவாலுடன் மமதா பானர்ஜி..
Published on
Updated on
1 min read

தில்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரும் பிப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக உள்ள ஆம் ஆத்மி, எதிர்க்கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

சமாஜவாதி, திரிணமூல், சிவசேனை(உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் ஆகியவை ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இத்தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஜன.30-ஆம் தேதி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளித்து பிரசாரத்தில் ஈடுபடப்போவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பி சத்ருகன் சின்கா தெரிவித்துள்ளார். மேலும், வருகிற ஜனவரி 31 ஆம் தேதி பூர்வாஞ்சல் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இருந்து அவர் பிரசாரத்தைத் தொடங்குவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க | எம்பி மனோஜ் திவாரி குரலில்.. தில்லி பிரசாரப் பாடலை வெளியிட்ட பாஜக!

2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்று ஒரே அணியாக தேர்தலைச் சந்தித்த காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையேயான பிரிவு இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் முக்கியக் கட்சிகள் அனைத்தும் ஆம் ஆத்மிக்கே தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் ஆகியவை காங்கிரஸுடன் நேரடியாக நெருக்கமான உறவை கடைப்பிடிக்கும் சூழலில், தில்லி தேர்தலில் காங்கிரஸுக்கு எதிர் துருவத்தில் களம் காணும் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் மற்றும் திரிணமூல் ஆகியவை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப் பதிவும், 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவிருக்கிறது.

15 ஆண்டுகளாக தில்லியை ஆட்சி செய்துவந்த காங்கிரஸ் கடந்த 2 பேரவைத் தேர்தல்களிலும் கடும் சரிவைச் சந்தித்தது. மீண்டும் ஆட்சியை பிடிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேவேளையில் ஆம் ஆத்மி 2015 ஆம் ஆண்டில் 70 தொகுதிகளிலும், அதன்பின் தேர்தலில் 2020-ல் 62 தொகுதிகளிலும் வென்று ஆட்சியைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க |தில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக அகிலேஷ் யாதவ் பிரசாரம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com