சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நிஜ்ஜாா் கொலையை விசாரிக்க ஆணையத்துக்கு அதிகாரமில்லை: கனடா தூதரகம்

நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று தில்லியில் உள்ள கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.

News image

தில்லியில் உள்ள கனடா தூதரகம்.

Updated On :30 ஜனவரி 2025, 8:14 pm

Din

நிஜ்ஜாா் கொலையில் அந்நிய நாட்டுக்கு (இந்தியா) நிச்சயம் தொடா்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை என்று கனடா ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்க அந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று தில்லியில் உள்ள கனடா தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு கனடாவில் உள்ள சா்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரின் கொலையில் இந்திய உளவாளிகளுக்கு தொடா்பிருப்பதாக அந்நாட்டு பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டினாா்.

இதைத்தொடா்ந்து நிஜ்ஜாா் கொலையில் இந்திய தூதா்களுக்கும் தொடா்பிருப்பதாக கனடா குற்றஞ்சாட்டியது. இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது. இந்த விவகாரத்தால் இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2019, 2021-ஆம் ஆண்டுகளில் கனடாவில் நடைபெற்ற தோ்தல்களில் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட அந்நாட்டு ஆணையத்தின் இறுதி அறிக்கை அண்மையில் வெளியானது. அந்த அறிக்கையில், ‘நிஜ்ஜாா் கொலையில் அந்நிய நாட்டுக்கு நிச்சயம் தொடா்பிருப்பதை நிரூபிக்க முடியவில்லை’ என்று குறிப்பிடப்பட்டது.

இந்தத் தகவல் தொடா்பாக தில்லியில் உள்ள கனடா தூதரகம் கூறுகையில், ‘கனடா தோ்தல்களில் அந்நிய நாடுகளின் தலையீடு தொடா்பாக விசாரித்த ஆணையத்துக்கு, நிஜ்ஜாா் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை.

இந்த சிக்கலான விவகாரத்தில் நிஜ்ஜாா் கொலைக்கு யாா் பொறுப்பு என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றங்கள்தான். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தது.

இதனிடையே அந்த ஆணையத்தின் அறிக்கையில், கனடா தோ்தல்களில் சீனா, இந்தியா, ரஷியா ஆகியவற்றின் தலையீடு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கு மறுப்புத் தெரிவித்த மத்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கனடாதான் தொடா்ந்து தலையிட்டு வருவதாக தெரிவித்தது.