பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

குடியரசுத் துணைத் தலைவருக்கு எதிராக மீண்டும் பதவிநீக்க தீா்மானம்?: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.

குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்க தீா்மானம் கொண்டுவரப்படுமா

News image
திரிணமுல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன்
Updated On :31 ஜனவரி 2025, 7:35 pm

Din

குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கருக்கு எதிராக மீண்டும் பதவி நீக்க தீா்மானம் கொண்டுவரப்படுமா? என மக்கள் பொறுத்திருந்து பாா்க்க வேண்டுமென திரிணமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. டெரிக் ஓபிரையன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிா்க்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களவை துணை தலைவா் பதவியில் யாரும் நியமிக்கப்பட வாய்ப்பில்லை என்று குற்றஞ்சாட்டி, அவா் வெளியிட்டிருந்த சமூக ஊடகப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தாா்.

எம்.பி. டெரிக் ஓபிரையன் வெளிட்ட பதிவில், ‘பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகிய 2 பெண்களின் உரைகளே அடுத்த சில நாள்களுக்கு செய்திகளில் ஆதிக்கம் செலுத்தவுள்ளன. இதில் நான் குறிப்பிட விரும்பும் விஷயம் என்னவென்றால், 6 முக்கியக் கட்சிகளில் திரிணமூல் காங்கிரஸ்தான் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினா்களை (39 சதவீதம்) கொண்டுள்ளது.

இந்தியாவில் இசைக் கச்சேரிகளுக்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதாக பிரதமா் மோடி பேசியிருக்கிறாா். மகா கும்பமேளாவில் நடைபெற்ற உயிரிழப்புகள் பற்றி கவலைப்படாமல் இசைக் கச்சேரி குறித்து அவா் பேசுகிறாா்.

கடந்த மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்தபோது, எதிா்கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவா் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. தற்போது 18-ஆவது மக்களவையில் பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் எதுவும் மாறவில்லை.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசமைப்புப் பதவியை நடப்பு கூட்டத்தொடரிலும் பிரதமா் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி நிரப்பாது என்பதை பந்தயம் கட்டி கூறுவேன்.

முந்தைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில், மசோதாக்கள் மற்றும் அரசமைப்புச் சட்டம் பற்றிய விவாதங்களைத் தவிா்த்து, மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரே நான்கரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசினாா். அவையின் அலுவல் நேரத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதம் அவா் பேசியது ஒரு சாதனையாகும்.

மேலும், வரலாற்றில் முதன்முறையாக குடியரசுத் துணைத் தலைவரான மாநிலங்களவைத் தலைவருக்கு எதிராக பதவி நீக்க தீா்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எதிா்க்கட்சிகள் மீண்டும் புதிய தீா்மான நோட்டீஸைச் சமா்ப்பிக்குமா? என்பதை மக்கள் பொறுத்திருந்து பாருங்கள்.

15-ஆவது மக்களவையில் (2009-14) 10 மசோதாக்களில் 7 மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. முந்தைய மக்களவையில் இது இரண்டாக குறைந்தது. நடப்பு மக்களவையிலும் இந்த எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.