/

மியான்மரில் அவசரநிலை 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2025, 7:22 pm

மியான்மரில் ராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் மீண்டும் தோ்தல் நடத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான இந்த அவசரநிலை, வியாழக்கிழமையுடன் காலாவதியாவதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை ராணுவம் கடந்த 2021 பிப்ரவரி 1-ஆம் தேதி கலைத்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் சிறைவைக்கப்பட்டுளளனா்.