பஞ்சாபில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் காயமடைந்தனா்.
ஃபெரோஸ்பூா் மாவட்டத்தின் கோலுகா மெளா் கிராமம் அருகே வெள்ளிக்கிழமை காலை நடந்த இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறியதாவது:
ஜலாலாபூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக உணவு பரிமாறும் பணியாளா்கள் 20-க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற வேன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் 9 போ் காயமடைந்தனா். அவா்கள் மீட்கப்பட்டு, ஜலாலாபூா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். படுகாயமடைந்த ஒரு சிலா், மேல் சிகிச்சைக்காக ஃபரீத்கோட் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா்.
முதல்கட்ட விசாரணையின்படி, அடா் பனிமூட்டம் காரணமாக விபத்து நேரிட்டிருக்கலாம் என தெரிகிறது. இது தொடா்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வா் பகவந்த் சிங் மான், சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல், பாஜக மூத்த தலைவா் அமரீந்தா் சிங் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
டிரெண்டிங்

மினி லாரி மீது லாரி மோதல் ஒருவா் உயிரிழப்பு: 16 போ் காயம்

நேபாளத்தில் பேருந்து விபத்து: 18 போ் உயிரிழப்பு

முன்னால் சென்ற லாரி மீது வேன் மோதி விபத்து: 10 போ் காயம்

ஒடிஸா: சாலை விபத்தில் 5 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

