நெய், சோப்பு, தின்பண்டங்கள் விலை குறைகிறதா? ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால்..?!

நெய், சோப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதைப் பற்றி....
நெய், சோப்பு, தின்பண்டங்கள் விலை குறைகிறதா? ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால்..?!
Published on
Updated on
1 min read

நெய், சோப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்றாட அத்தியாவசிய பொருள்கள் மீதுள்ள வரியைக் குறைத்து பொதுமக்களின் வரிச்சுமையைக் குறைக்கவும், அவற்றின் மீதான வரியை மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மிகக் குறைந்த அளவிலான வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு நற்செய்தியாகவும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், அத்தியாவசிய பொருள்களின் சரக்கு மற்றும் சேவை வரியின் நிலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சில அத்தியாவசியப் பொருள்கள் 5 முதல் 12 சதவிகித நிலைகளில் வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒருவேளை இந்த அளவு மாற்றம் செய்யப்பட்டு விகிதம் குறைக்கப்படலாம், அல்லது முற்றிலுமாக நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதில், விகிதம் குறைக்கப்படுவதால் பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும்.

ஜிஎஸ்டியின் 56-வது கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கருதப்படுகிறது. மேலும், அரசு மரபுமுறையின்படி கூட்டம் நடைபெறுவதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த மாத இறுதியில் இதன் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகள் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு சில மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாக மக்களின் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில், வரிவிகிதங்களின் மாற்றங்களைக் கொண்டுவர பரிந்துரைப்பார்கள்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், 2017 ஆம் ஆண்டு பொருள்கள் மீதான மறைமுக வரி விதிக்கப்பட்டதற்கு பின்னர், ஜிஎஸ்டி விகிதங்களில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

In what could bring major relief to middle- and lower-income households, the central government is seriously considering a restructuring of the Goods and Services Tax (GST) slabs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com