அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்பு!

அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் சந்திப்பு பற்றி...
TN Governor R.N. Ravi meets Minister Rajnath Singh
அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்திப்புX
Published on
Updated on
1 min read

தில்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சந்தித்துப் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநர் ரவி, எக்ஸ் சமூக வலைதளத்தில்,

"தொலைநோக்குப் பார்வையும் துடிப்புமிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்த அமைச்சரின் கருத்துக்கள் மற்றும் அனுபவத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் தில்லி சென்ற ஆளுநர் தற்போது மீண்டும் தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இன்று அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த ஆளுநர் ரவி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Summary

TN Governor R.N. Ravi meets Minister Rajnath Singh in delhi and discussed various national issues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com