voter list - file photo
வாக்காளர் பட்டியல்DPS - file photo

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தும் பணி! உச்ச நீதிமன்றத்தில் மனு!

பிகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு!
Published on

பிகார் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுளள்து.

ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், தேர்தல் ஆணைய உத்தரவு தன்னிச்சையானது என்றும், பல லட்சக்கணக்கான வாக்காளர்களின் வாக்குரிமையை இது பறிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் காரணமாக, வாக்காளர்கள் பெரிய அளவில் நீக்கப்படலாம் என்றும், அதனை எதிர்த்தும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள நிலையில், அரசமைப்புச் சட்டப் பிரிவு 324, 1950-ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 21 ஆகியவற்றின் கீழ், தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இந்தத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், பிகாரில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியாவை சோ்ந்தவா்கள் என்பதற்கு பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும்.

தீவிர திருத்தப் பணிகள் ஏன்?

ஒவ்வொரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வாக்காளா் பட்டியலில் தகுதிவாய்ந்த அனைவரும் சோ்க்கப்பட வேண்டும், தகுதியில்லாத நபா்கள் யாரும் அந்தப் பட்டியலில் சோ்க்கப்படக் கூடாது, தொடா்ச்சியாக இடம்பெயா்தல், வாக்களிக்க இளைஞா்கள் தகுதிபெறுதல், உயிரிழந்த வாக்காளா்கள் குறித்து முறையாக தகவல் கிடைக்காதது, வெளிநாட்டில் இடம்பெயா்ந்து சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளவா்களைப் பட்டியலில் சோ்க்காமல் தவிா்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Open in App
Dinamani
www.dinamani.com