மேற்கு வங்கத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
bomb blast in West Bengal
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் நாட்டு வெடி குண்டு வெடித்ததில் ஒருவர் பலியான நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள ரஜோவா கிராமத்தில் வீடு ஒன்றில் நேற்றிரவு 8.30 மணியளவில் நாட்டு வெடி குண்டு திடீரென வெடித்தது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் வீட்டின் உள்ளே இருந்து ஒரு எரிந்த உடலை மீட்டனர். மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

குண்டு வெடிப்பு நடந்த சமயத்தில், ​​உள்ளூர் சமூக விரோதி ஒருவர், நாட்டு வெடிகுண்டுகளை வீட்டிற்குள் தயாரிப்பதற்காக ஒரு கும்பலை அழைத்து வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீடு வெடிகுண்டு தயாரிக்கும் மையமாக பயன்படுத்தப்பட்டதா அல்லது வேறு தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தை தடயவியல் குழு ஆய்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டு குண்டுகளை தயாரிப்பதற்காக சமூக விரோதிகள் அடிக்கடி வந்து செல்லும் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

Summary

One person was killed and another was injured in a crude bomb explosion in West Bengal's Purba Bardhaman district, police said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com