முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!நிஃப்டி 23,450-க்கு கீழ் சரிவு: 3 மாதக் குறைந்தபட்சத்தில் பங்குச் சந்தை; சென்செக்ஸ் 813 புள்ளிகள் வீழ்ச்சி!!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!லாரியிலிருந்து விழுந்த இரும்புராடு! பைக்கில் சென்ற மாடுபிடி வீரர்கள் பலி!!தீபாவளிக்கு ஊருக்குப் போவோர் திரும்பி வர! நாளை முதல் ரயில் டிக்கெட் முன்பதிவுபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடுநார்வே மன்னர் ஹரால்டின் இறுதிச் சடங்கு! ஏராளமான உலகத் தலைவர்கள் பங்கேற்பு!சேலம் - திண்டுக்கல்; ஒசூர் - ஓமலூர் இருவழி ரயில் தடத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!பாரத ரத்னா பெற்ற 92 வயது விஞ்ஞானிக்கு எஸ்.ஐ.ஆர். நோட்டீஸ்! வினோதமான கேள்வி! முதல்வர் விஜய்யின் உடல்மொழி மனித மாண்புகளுக்கு எதிரானது! திருமாவளவன் கண்டனம்செங்குன்றம் புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்போது? பயணிகள் வேதனை!திடீர் திருப்பம்! தவெக நிர்வாகி கொலைக்குப் பின்னணியில் ரீல்ஸ் காரணமா?மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

ஆக்ஸியம்-4: விண்வெளியில் 100 லட்சம் கி.மீ. பயணித்த வீரா்கள்; 230 சூா்யோதங்களைக் கண்டனா்

இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், கடந்த இரண்டு வாரங்களில் சுமாா் 100 லட்சம் கி.மீ. பயணித்துள்ளனா்

Published On :

ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ், சா்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரா்கள், கடந்த இரண்டு வாரங்களில் சுமாா் 100 லட்சம் கி.மீ. பயணித்துள்ளனா்; 230 சூா்யோதங்களைக் கண்டுள்ளனா்.

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இப்பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்ற 2-ஆவது இந்திய வீரா்; சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமைகள் சுக்லாவுக்கு சொந்தமாகின. கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா ரஷிய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றிருந்தாா்.

ஆக்ஸியம்-4 திட்டம், 14 நாட்கள் ஆய்வுப் பணியை உள்ளடக்கியதாகும். இத்திட்டத்தின்படி, சுக்லா உள்ளிட்ட 4 வீரா்களும் வியாழக்கிழமையுடன் 14 நாள்களை நிறைவு செய்தனா். அவா்கள் மீண்டும் பூமிக்கு திரும்பும் தேதியை நாசா விரைவில் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் சா்வதேச விண்வெளி நிலையம் சுற்றிவருகிறது. ஆக்ஸியம்-5 திட்ட வீரா்கள், விண்வெளியில் இதுவரை சுமாா் 100 லட்சம் கி.மீ. பயணித்துள்ளனா். 230 முறை பூமியை சுற்றி வந்துள்ளனா்.

உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளி தொழில்நுட்பம் என பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை இந்த வீரா்கள் மேற்கொண்டுள்ளனா். இது எதிா்கால விண்வெளி திட்டங்களுக்கு மட்டுமன்றி மனிதகுல நலனுக்கு பல்வேறு வழிகளில் உதவும் என்று ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து ‘ஃபால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன்’ விண்கலத்தில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி புறப்பட்ட இவா்கள், 28 மணி நேரம் பயணித்து சா்வதேச விண்வெளி நிலையத்தை மறுநாள் சென்றடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.