மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
அதில், மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகம் (பாஜக) மூத்த வழக்கறிஞர், வெளியுறவுத்துறை முன்னாள் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, முன்னாள் ஆசிரியர் சதானந்தன் மாஸ்டர் (பாஜக) மற்றும் வரலாற்று ஆய்வாளர் மீனாக்ஷி ஜெயின் ஆகியோர் நியமன எம்.பிக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதனை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. இதனிடையே நியமன எம்.பி.க்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 பேரை குடியரசுத் தலைவர் மாநிலங்களவைக்கு நியமிக்கிறார்.
மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
மீதமுள்ள உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
President Droupadi Murmu has nominated four eminent personalities to the Rajya Sabha (RS), India's Upper House of Parliament, on the recommendation of the Council of Ministers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்து
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து

குடியரசுத் தலைவர், துணைத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

66 பேருக்கு பத்ம விருதுகள்: இன்று வழங்குகிறாா் குடியரசுத் தலைவா்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



