ஆந்திரம்: கனக துர்கா கோயிலில் திரௌபதி முர்மு சாமி தரிசனம்!
ஆந்திரத்தில் உள்ள கனக துர்கா கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்தது குறித்து...

கனக துர்கா கோயிலில் திரௌபதி முர்மு. - படம் - பிடிஐ
ஆந்திரத்தின் விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை (அக். 14) சாமி தரிசனம் செய்தார்.
இரண்டு நாள் பயணமாக திரௌபதி முர்மு ஆந்திரம் வந்துள்ளார். தில்லியிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு ஆந்திரம் வந்த திரௌபதி முர்மு கனக துர்கா கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
இன்றிரவு ஆந்திரத்தில் தங்கும் குடியரசுத் தலைவர் நாளை (அக். 15) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்படி, விஜயவாடாவில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் சார்பில் நடைபெறும் சரஸ் ஆஜீவிகா மேளாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற்று அந்த நிக்ழ்வினைத் தொடக்கி வைக்கிறார்.
இதன்பிறகு, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் மதிய உணவு அருந்தும் திரௌபதி முர்மு அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
இதையடுத்து, தனது ஆந்திரப் பயணத்தை நிறைவு செய்யும் திரௌபதி முர்மு மாலை 3 மணியளவில் தில்லி புறப்படுகிறார்.
முன்னதாக, கனக துர்கா கோயிலில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நேற்று சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது,.
Summary
President Droupadi Murmu offered prayers at the Kanaka Durga Temple in Vijayawada, Andhra Pradesh, on Wednesday (Oct. 14).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


