சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு திமுகவும் அதிமுகவும் எந்த காலத்திலும் இணையாது: டிடிவி தினகரன்கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி மேயர் பிரியாவை புறக்கணிக்கவில்லை: ராஜ்மோகன் பதில்!ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது பற்றி...

President Murmu's two-day Odisha visit postponed over cyclone forecast

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. - PTI

Updated On :

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒடிசாவின் ராய்ரங்பூர் மற்றும் தனது சொந்த மாவட்டமான மயூர்பஞ்சிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் விடுக்கப்பட்டிருக்கும் புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவரது இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வானிலை சாதகமாக இல்லாததாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் இப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தலைமைச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், மயூர்பஞ்ச் மாவட்ட நிர்வாகத்தின் தகவல்படி, பயணம் ரத்து செய்யப்படவில்லை. மாறாக மறுதிட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, குடியரசுத் தலைவர் முர்மு நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் மயூர்பஞ்சிற்குப் பயணம் மேற்கொள்வார் என்று அந்த அதிகாரி கூறினார்.

இதற்கிடையே, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுவடையக்கூடும் என்றும், இது அக்டோபர் 28-ம் தேதி காலை வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Summary

President Droupadi Murmu's scheduled two-day visit to Odisha from October 28 has been postponed in the wake of a possible cyclonic storm in the state's coastal areas next week, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.