ஒடிசாவில் மாணவி மரணம்; பாஜகவின் நேரடிக் கொலை: ராகுல் காந்தி

ஒடிசா மாணவி மரணம் தொடர்பாக ராகுல் காந்தி கண்டனம்.
ராகுல் காந்தி
ராகுல் காந்திகோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஒடிசா மாநிலத்தில் நீதிக்காகப் போராடிய ஒரு மகளின் மரணம், பாஜக அமைப்பின் நேரடிக் கொலை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் உள்ள ஃபக்கீர் மோகன் தன்னாட்சிக் கல்லூரியில் படித்து வந்த 20 வயது மாணவிக்கு, கல்லூரியின் துறை தலைவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக அளித்த புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்து பலியானார்.

இது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி தனது கண்டனத்தை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஒடிசாவில் நீதிக்காகப் போராடிய ஒரு மகளின் மரணம், பாஜக அமைப்பின் நேரடிக் கொலையாக பார்க்கப்படுகிறது.

அந்தத் துணிச்சலான மாணவி பாலியல் சுரண்டலுக்கு எதிராகக் குரல் எழுப்பினார் - ஆனால் நீதிக்குப் பதிலாக, அவர் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டார், துன்புறுத்தப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார்.

மாணவியைப் பாதுகாக்க வேண்டியவர்கள், அவளை நொறுக்கிக்கொண்டே இருந்தார்கள்.

எப்போதும் போல, பாஜக அமைப்பு குற்றம் சாட்டப்பட்டவரைப் பாதுகாத்துக்கொண்டே இருந்தது - மேலும் ஒரு அப்பாவி மாணவியைத் தீக்குளிக்க கட்டாயப்படுத்தியுள்ளது. இது தற்கொலை அல்ல, திட்டமிட்ட கொலை.

நரேந்திர மோடி அவர்களே, அது ஒடிசாவாக இருந்தாலும் சரி, மணிப்பூராக இருந்தாலும் சரி - நாட்டின் மகள்கள் எரிந்து, இறந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள்.

நாடு உங்கள் மௌனத்தை விரும்பவில்லை, பதில்களை விரும்புகிறது. இந்தியாவின் மகள்கள் பாதுகாப்பையும் நீதியையும் விரும்புகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Lok Sabha Opposition Leader and Congress MP Rahul Gandhi has condemned the death of a daughter fighting for justice in the state of Odisha, calling it a direct murder by the BJP organization.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com