
தில்லியில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை திமுக எம்.பி.க்கள் இன்று(வியாழக்கிழமை) சந்தித்துப் பேசியுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, டி.எம்.செல்வகணபதி, தங்க தமிழ்ச்செல்வன், முரசொலி, ராஜேஷ்குமார் ஆகியோர் இன்று தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங், விவேக் ஜோஷி ஆகியோரைச் சந்தித்துப் பேசினர்.
அப்போது தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடைபெறும்போது ஆதார், ரேஷன் அட்டையை ஆவணமாகப் பெற வேண்டும் என தேர்தல் ஆணையரிடம் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் தேர்தல் தொடர்பான அனைத்து விதிமுறைகளும் ஹிந்தி, ஆங்கிலத்தில் இருப்பதுபோல தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.