அச்சுதானந்தன் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தலைவர்கள் அஞ்சலி!

அச்சுதானந்தன் உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தலைவர்கள் அஞ்சலி செலுத்தியதைப் பற்றி...
அச்சுதானந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன்.
அச்சுதானந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய கேரள முதல்வர் பினராயி விஜயன். (படம் | ஏஎன்ஐ)
Published on
Updated on
1 min read

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் இறுதிச்சடங்கில் பங்கேற்று, அவரது உடலுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்புக் காரணமாக நேற்று(ஜூலை 21) மரணமடைந்தார். அவரது உடல் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தலைமைச் செயலக தர்பார் மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் சிபிஎம் தலைவர்கள் தர்பார் மண்டபத்துக்கு வந்தனர்.

அதைத்தொடர்ந்து, முதல்வர் பினராயி விஜயன், கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட தலைவர்கள் அச்சுதானந்தன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பொதுமக்களில் அஞ்சலிக்காக அச்சுதானந்தனின் உடல் மதியம் 2 மணி வரை தர்பார் மண்டபத்தில் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வெள்ளத்தில் அச்சுதானந்தன் உடல் கொண்டு செல்லப்பட்டபோது...
மக்கள் வெள்ளத்தில் அச்சுதானந்தன் உடல் கொண்டு செல்லப்பட்டபோது...(படம் | சிபிஎம் கேரளம்)

தர்பார் ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரின் உடல், தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக ஆலப்புழாவின் புன்னப்ராவில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

இன்று இரவு 9 மணிக்குள் பரவூரில் உள்ள புன்னப்ராவில் உள்ள வேலிககாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் சிபிஎம் ஆலப்புழா மாவட்டக் குழு அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

பின்னர் காலை 10 மணி முதல் ஆலப்புழா கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. புன்னப்ரா வயலார் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் பிற்பகல் 3 மணிக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Summary

Achuthanandan's funeral: Kerala Chief Minister Pinarayi Vijayan, leaders pay tribute!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com