ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர்.
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர்.
Published on
Updated on
1 min read

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின் தகவல்களின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கின.

தொடர்ந்து மாலையில் இருத்தரப்பினர் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதுவரை, என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் நான்கு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பஸ்தர் பிரிவு ஐஜி சுந்தர்ராஜ் கூறினார்.

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கடந்த 18 மாதங்களில், பஸ்தர் மலைத்தொடரில் பல்வேறு மோதல்களில் 425 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

உளவுத் துறையின் தகவலின் பேரில், ஜார்க்கண்ட் சிறப்பு அதிரடிப் படை மற்றும் கும்லா காவல்துறையினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Summary

At least four Maoist cadres were killed in an exchange of fire in Chhattisgarh's Bijapur district, while three others were killed in Jharkhand’s Gumla district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com