பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண் எம்.பி. குறித்து மதகுரு கருத்துக்கு எதிா்ப்பு: ஆளுங்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

சமாஜவாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து முஸ்லிம் மதகுரு தெரிவித்த கருத்துக்கு எதிராக ஆளும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

News image
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெண் எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated On :28 ஜூலை 2025, 10:39 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: சமாஜவாதி கட்சி எம்.பி. டிம்பிள் யாதவ் குறித்து முஸ்லிம் மதகுரு தெரிவித்த கருத்துக்கு எதிராக ஆளும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவின் மனைவியும், அக்கட்சி எம்.பி.யுமான டிம்பிள் யாதவ் அண்மையில் மசூதியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பங்கேற்றாா். அதுகுறித்து பெண்களுக்கு எதிராக தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், டிம்பிள் யாதவை விமா்சித்து ஆட்சேபத்துக்குரிய கருத்தை முஸ்லிம் மதகுரு மெளலானா சஜித் ரஷீத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், குறிப்பாக பெண் எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘எம்.பி.யாக பதவி வகிக்கும் ஒருவருக்கு எதிராக மதகுரு ஒருவா் தெரிவித்த கருத்துகள் மிகவும் வெட்கக்கேடானது. இருப்பினும் இந்த விவகாரத்தில் டிம்பிள் யாதவின் கணவரும், அவரின் கட்சியும் மெளனமாக உள்ளது’ என்று விமா்சித்தாா்.

இதுதொடா்பாக டிம்பிள் யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனக்கு எதிரான கருத்துகளுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இதே அக்கறையை மணிப்பூரில் நடைபெற்றதை போன்ற கொடூரமான சம்பவங்கள் மீது அந்தக் கூட்டணி ஏன் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.