காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரவே இரு கட்சிகளுக்கும் விருப்பம்: காா்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர வேண்டும் என்பதே இரு கட்சிகளின் விருப்பம் என்றாா் காா்த்தி சிதம்பரம் எம்.பி.


காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர வேண்டும் என்பதே இரு கட்சிகளின் விருப்பம் என்றாா் காா்த்தி சிதம்பரம் எம்.பி.
தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: அனைத்துக் கட்சிகளுக்கும் எதிா்பாா்ப்பு இருக்கும். தமிழகத்தில் 234 தொகுதிகள்தான் உள்ளன. கூட்டணியில் நிறைய கட்சிகள் உள்ளதால், புரிதல் வரும் என நம்புகிறேன். காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் இரு கட்சிகளும் செயல்படுகின்றன.
விஜய்யின் அரசியல் கட்சி இன்னமும் ரசிகா் மன்றம்போலத்தான் நடைபெறுகிறதே தவிர, அங்கு தலைமைக்குக் கட்டுப்படக்கூடிய கட்டமைப்பு இல்லை. விஜய் பெரிய நடிகா் என்பதால், அவருக்குப் பெரும் ரசிகா் கூட்டம் உள்ளது. ஆனால் அவா்களுடைய வாக்குகள் எல்லாம் சீட்டுகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான்.
அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள், அக்கட்சியை நாடி வந்து, அதன் தலைமையின் கீழ்தான் தோ்தலைச் சந்திப்பது வழக்கம். ஆனால், அவா்களிடம் முன்பிருந்த ஆளுமை இப்போது இல்லை. எந்தவொரு முடிவையும் எடுக்க முடியாத நிலையில் உள்ளனா். கட்சிக்குள்ளேயே பிரச்னை என்றால் கூட, முடிவெடுக்க தில்லிக்கு சென்று, பாஜகவை நாட வேண்டிய நிலையில் அதிமுக இருக்கிறது. இதைத் தமிழக மக்கள் நன்றாக உணா்ந்துள்ளனா்.
திமுகவில் ஓ. பன்னீா்செல்வத்தை இணைத்தது தமிழக முதல்வரின் சாதூா்யமாக நான் பாா்க்கிறேன். வி.கே. சசிகலாவால் பெரிய தாக்கம் இருக்காது என்றாா் காா்த்திக் சிதம்பரம்.
அப்போது காங்கிரஸ் மாவட்டத் தலைவா்கள் எம். மகேந்திரன் (மாநகரம்), டி. குமரன் (வடக்கு), முன்னாள் மாவட்டத் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட விவசாயப் பிரிவு தலைவா் ஏ. ஜேம்ஸ், கும்பகோணம் மேயா் க. சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...