தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களுக்கு சூர்யகுமார் யாதவின் நகைச்சுவையான பதில்!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களுக்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

News image
சூர்யகுமார் யாதவ்- படம் | பிடிஐ
Updated On :21 பிப்ரவரி 2026, 12:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்து தான் கவலைப்படுவதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் லீக் சுற்று போட்டிகள் நிறைவடைந்தது இன்று (பிப்ரவரி 21) முதல் சூப்பர் 8 சுற்றுக்கான போட்டிகள் தொடங்குகின்றன.

கொழும்பின் பிரேமதேசா திடலில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை நாளை (பிப்ரவரி 22) எதிர்கொள்கிறது.

அபிஷேக் சர்மா

அபிஷேக் சர்மா

இந்த நிலையில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து கூறவேண்டுமென்றால், அபிஷேக்கின் ஃபார்ம் குறித்து கவலைப்படுபவர்களை நினைத்து எனக்கு கவலையாக உள்ளது. அவர்கள் ஏன் அபிஷேக் சர்மாவின் ஃபார்ம் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டும். கடந்த ஆண்டு அதிரடியாக விளையாடி அணியில் உள்ள வீரர்கள் அனைவரையும் அபிஷேக் பாதுகாத்தார். ஒரு அணியாக அவரைப் பாதுகாக்க வேண்டியது எங்களது கடமை.

உலகக் கோப்பைத் தொடரில் அபிஷேக் சர்மா அவரது ரன் கணக்கை இன்னும் தொடங்கவில்லை. அவர் ரன் கணக்கைத் தொடங்கி விட்டால், என்ன நடக்கும் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் அதிரடியாக விளையாடினால், எப்படி இருக்கும் என்பதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

அதிரடியாக விளையாடும் அவரது அடையாளத்தை அபிஷேக் சர்மா ஒருபோதும் இழக்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. அவரது அதிரடியான ஆட்டம் அணிக்கு தேவைப்படுகிறது.. அதிரடியாக விளையாடும் முயற்சியில் அவர் ஆட்டமிழந்தால், ரன்கள் குவிக்க அடுத்தடுத்த இடங்களில் நாங்கள் இருக்கிறோம் என்றார்.

அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் டக் அவுட்டானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.