அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

அருணாசலில் வெள்ளம், நிலச்சரிவு: 11 பேர் பலி, 23 மாவட்டங்கள் பாதிப்பு!

அருணாசலில் இடைவிடாத மழை, நிலச்சரிவில் சிக்கித் தவிக்கும் மக்கள்..

News image
Updated On :3 ஜூன் 2025, 8:19 am

DIN

அருணாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தின் அறிக்கையின்படி,

ஜூன் 1ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவின்போது சுவர் இடிந்து விழுந்ததில் 38 வயது பாபெண் முர்மு உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து மூன்று தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

23 மாவட்டங்களில் உள்ள 156 கிராமங்களில் மொத்தம் 938 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுபன்சிரி மாவட்டத்தில் 114 குடிசை வீடுகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. மேலும் 51 சாலைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 17 மின் இணைப்புகள், 23 நீர் வழங்கல் இணைப்புகள் மற்றும் 2 பள்ளிகள் சேதமடைந்ததுள்ளது. இட்டாநகர் தலைநகர் பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

ஆறுகள், துணை நதிகள் தொடர்ந்து அபாய அளவைத் தாண்டி பாய்வதால் மேற்கு கமெங், கம்லே, லோயர் மற்றும் அப்பர் சுபன்சிரி, பப்பும் பரே, திபாங் பள்ளத்தாக்கு, லோயர் திபாங் பள்ளத்தாக்கு, லோஹித், சாங்லாங், கிரா டாடி, குருங் குமே, லாங்டிங் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் பதிவாகியுள்ளன.

மேலும், டிரான்ஸ்-அருணாசல் நெடுஞ்சாலையில் உள்ள மக்கான்டோங் பாலத்தின் பாதி அடித்துச் செல்லப்பட்டது. இதனால் மியாவோ மற்றும் போர்டும்சா இடையேயான சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் டானி சுலு தெரிவித்தார்.

திபாங் பள்ளத்தாக்கிலிருந்து 14 தொழிலாளர்களும், லோஹித் மாவட்டத்தில் உள்ள ஜல்லுக்பாரி கிராமத்திலிருந்து 4 பேர் உள்பட 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.