செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

2027-ல் மக்கள் தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு தகவல்.

News image

மத்திய அரசு

Updated On :4 ஜூன் 2025, 6:38 pm IST

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பணி பிரதேசங்களான ஹிமாசல், உத்தரகண்ட் மாநிலங்கள் மற்றும் ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் வரும் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். கடைசியாக கடந்த 2011-இல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2021 மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ரூ.8,754 கோடி செலவில் மேற்கொள்வதற்கும், தேசிய மக்கள் பதிவேட்டை ரூ.3,941 கோடி செலவில் புதுப்பிக்கவும் மத்திய அமைச்சரவை கடந்த 2019-இல் ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் தேசிய மக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் நடைமுறைகளை 2020, ஏப்ரல் 1 முதல் செப்டம்பா் 30 வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கரோனா பெருந்தொற்று பரவலால் திட்டமிட்டபடி தொடங்கப்படாத இப்பணிகள், தொடா்ந்து ஒத்திவைக்கப்பட்டன. 5 ஆண்டு காலமாக இப்பணிகள் தாமதமாகி வருவதால், மத்திய அரசை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன.

இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் வெளிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

இந்த நிலையில், 2027 ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.