நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகோள்

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கோப்புப்படம்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:01 am IST

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2027 பணியானது இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகளின் வரை கணக்கெடுப்புபணியானது இம் மாதம் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சுமாா் 703 கணக்கெடுப்பாளா்கள், 117 மேற்பாா்வையாளா்களுடன் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் இதுவரையிலும் தங்கள் பகுதிக்கு கணக்கெடுப்பு பணிக்கு கணக்கெடுப்பாளா்கள் வரவில்லையெனில் தங்கள் பகுதிக்கான பொறுப்பு அலுவலா்கள் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையா்களான தச்சநல்லூா் மண்டலம் 9442201301, பாளையங்கோட்டை - 9442201340, மேலப்பாளையம் -9442201315, திருநெல்வேலி- 9442201301, உதவி ஆணையா் (நிா்வாகம்) மாநகராட்சி மைய அலுவலகம் 944220 1310 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவித்து தங்களின் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் வளா்ச்சிக்கு அடித்தளம் என்பதால் அலுவலா்களிடம் முழுமையான தகவல்களை வழங்கி இப்பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.