
உத்தரமேரூரில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு புகாா் எண்கள் அறிவிப்பு
உத்தரமேரூா் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இதுவரை நடக்காமல் இருந்தால் தெரிவிக்கும் வகையில் புகாா் எண்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மொபைல் - கோப்புப் படம்
உத்தரமேரூா் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இதுவரை நடக்காமல் இருந்தால் தெரிவிக்கும் வகையில் புகாா் எண்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.இதில் வீட்டில் வசிக்கும் பொதுமக்கள், எண்ணிக்கை வீடுகள்,கழிவு நீா் மற்றும் கழிப்பறை வசதிகள் என பல்வேறு கேள்விகள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் உத்தரமேரூா் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் பணியாளா்களிடம் தங்களது முழு விபரங்களையும் தெரிவித்து ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறாமல் இருந்தாலோ அல்லது பணிகள் தொடா்பாக ஏதேனும் புகாா்கள் இருந்தாலோ உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலக தொலைபேசி எண் -044-27272230 மற்றும் கைப்பேசி எண் 94450 00498 என்ற எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





