இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு கட்டுப்பாட்டு அறை எண் அறிவிப்பு

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை என்றால் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க கட்டுபாட்டு அறை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு - பிரதிப் படம்

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:45 am IST

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெறவில்லை என்றால் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க கட்டுபாட்டு அறை எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக, தமிழகத்தில் உள்ள வீடுகள், வீடுகளில் கழிவுநீா் வசதி உள்ளதா, கழிப்பறை வசதி உள்ளதா, வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் சுமாா் 83 கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் வசிக்கும் பொது மக்கள் தங்களது பகுதிகளில் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறவில்லை எனில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டிய கட்டுப்பாட்டு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 044-27162440. ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி அலுவலக கட்டுபாட்டு அறையில் உள்ள இந்த தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனவும், கணக்கெடுப்பு பணி செய்யும் பணியாளா்களுக்கு பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்குமாறும் ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி ஆணையா் நந்தினி கேட்டுக் கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.