
கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், கர்நாடகத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 65 வயதுடைய நபர் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதன்மூலம், அம்மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகத்தில் கரோனா பாதிப்புக்கு தற்போது 65 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 644 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 566 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் எனவும், 78 ஆர்ஏடி பரிசோதனைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.