பஹல்காம் தாக்குதலுக்குப் பின் காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி! பாதுகாப்பு அதிகரிப்பு!!

பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
PM Modi visits jammu-kashmir
பிரதமர் நரேந்திர மோடிகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் முதல்முறையாக பிரதமர் மோடி, ஜம்மு-காஷ்மீர் செல்லவிருக்கும் நிலையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஏப். 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே 4 நாள்கள் நடந்த போர், பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு நாளை(ஜூன் 6) செல்லவிருக்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

காஷ்மீருடன் நேரடி ரயில் இணைப்புக்கான உதம்பூா்-ஸ்ரீநகா்-பாரமுல்லா ரயில் வழித்தடத் திட்டத்தைத் தொடக்கிவைக்கிறார். 1997-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் மொத்தம் 272 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் 161 கி.மீ. தொலைவு வழித்தடம் ஏற்கெனவே பல்வேறு கட்டங்களாக தொடங்கப்பட்டது. இறுதியாக 111 கி.மீ. தொலைவுள்ள கத்ரா-பனிஹால் வழித்தடப் பணிகள் கடந்த ஜனவரியில் நிறைவடைந்தன. இதையடுத்து, காஷ்மீருக்கான நேரடி ரயில் சேவையை பிரதமா் மோடி கடந்த ஏப்ரலில் திறந்துவைப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக பிரதமரின் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தையும் நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா். செனாப் நதியின் குறுக்கே 369 மீட்டா் உயரத்தில் பிரம்மாண்ட இரும்புப் பாலம் கட்டப்பட்டுள்ளது. ஈஃபில் டவரைவிட அதிக உயரமுடைய இப்பாலம், உலகின் மிக உயரமான ரயில் பாலம், உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் ஆகிய சிறப்புகளைப் பெற்றுள்ளது.

மேலும் கத்ரா-பாரமுல்லா இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com