யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

53வது பிறந்தநாளில் யோகி ஆதித்யநாத்துக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து..
பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத்.
பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத்.
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி எக்ஸில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். மாநிலத்தை பல்வேறு துறைகளில் மாற்றம் செய்ய அயராது முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக மேம்படுத்தியுள்ளார்.

கடவுள் அவருக்கு நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராத்நாத் சிங்,

மாநிலத்தை வளர்ச்சியின் புதிய உயரங்களுக்குக் கொண்டு சென்றதற்காக முதல்வரைப் பாராட்டினார். பொது நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அவர் தொடர்ந்து அயராது பாடுபடுகிறார். அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்கட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி ஆகியோரும் ஆதித்யநாத்துக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேச முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆயுளுடன் இருக்க வாழ்த்துகிறேன் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

துணை முதல்வர் பிரஜேஷ் பதக், புஷ்கர் சிங் தாமி, தேவேந்திர ஃபட்னவிஸ், பஜன்லால் சர்மா உள்ளிட்ட பல முதல்வர்களும் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com