
எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.
முன்னதாக, அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது. இப்போது, அதே உத்தியைப் பின்பற்றி, பிகார் தேர்தலில் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியிருந்தார்.
தேர்தலில் எவ்வாறு மோசடி செய்வது? அதற்கான வரைபடம்தான் மகாராஷ்டிர தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் எழுதிய கட்டுரை ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. அதில்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், ராகுல் காந்தி விவகாரத்தில் இன்று(ஜூன் 7) தேர்தல் ஆணைய வட்டாரங்கள் பேசுகையில், மகாராஷ்டிர தேர்தலில் முறைகேடுகள் பல இருந்ததாக காங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு விள்க்கமளித்து அக்கட்சிக்கு கடந்த டிசம்ப மாதம் தேர்தல் ஆணையத்தால் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவித்தன.
மேலும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘ஆனால், ராகுல் காந்தியோ தேர்தல் ஆணையத்துக்கு நேரடியாக எழுதி விளக்கம் கோராமல் ஊடகத்தில் தமது கருத்துகளையும் சந்தேகங்களையும் பதிவிட்டு மீண்டும் மீண்டும் விமர்சிப்பதாக’ கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில், ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் இன்று(ஜூன் 7) மாலை வெளியிட்டுள்ள பதிவில் தேர்தல் ஆணையம் மீது மீண்டுமொரு முறை கடுமையான விமர்சனங்களை சுமத்தியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: ”தேர்தல் ஆணையம் ஒரு ஜனநாயக நிறுவனமாகும். அப்படியிருக்கும்போது, தமது குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படைத் தன்மையில்லாமல் தப்பிக்க நினைக்கும் மனப்போக்குடன் முக்கியமான பல கேள்விகளுக்கு மேம்போக்கான பதில்களை விளக்கமாக வெளியிட்டிருப்பதாக” கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ராகுல் காந்தி.
“உங்கள் மீதானநம்பகத் தன்மையை பாதுகாத்துக்கொள்ள இம்மாதிரியான தப்பித்து ஓட நினைக்கும் போக்கு அரணாக அமையாதெனவும், உண்மையைச் சொல்வதால் மட்டுமே அதனை பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.