
கடந்த 2024ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்ததாகவும், அடுத்து பிகார்தான் என்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டு வெற்றி பெற்றது. இப்போது, அதே உத்தியைப் பின்பற்றி, பிகார் தேர்தலில் முறைகேடு செய்ய திட்டமிட்டுள்ளது என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.
வெள்ளிக்கிழமை, பிகார் மாநிலத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிவிட்டு தில்லி திரும்பிய நிலையில், ராகுல் இவ்வாறு குற்றம்சாட்டியிருக்கிறார்.
ஜனநாயகத்தில் முறைகேடு செய்வதற்கான வரைபடம்தான் 2024 மகாராஷ்டி பேரவைத் தேர்தல். தேர்தலில் எவ்வாறு மோசடி செய்வது? அதற்கான வரைபடம்தான் மகாராஷ்டிர தேர்தல் என்று காங்கிரஸ் தலைவர் எழுதிய கட்டுரை ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியிருக்கிறது. அதில்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. தங்கம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி! விலை அதிரடி குறைவு!!
மேலும், தேர்தலில் முறைகேடு செய்யும் வழிமுறைகள் என்று சில குறிப்புகளையும் அவர் விவரித்துள்ளார்.
அதில்,
தேர்தல் ஆணையத்தை நியமிப்பதற்கான குழுவை அமைக்கவும்.
போலியான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கவும்.
எங்கெல்லாம் பாஜக வெற்றி பெற வேண்டுமோ அங்கெல்லாம் போலி வாக்குகள் பதிவு செய்யப்படும்.
தடயங்கள் மறைக்கப்படுவது..
இதுதான் தேர்தல் மோசடியின் படிநிலைகள் என்றும் ராகுல் கூறியிருக்கிறார்.
இவ்வாறு பாஜக செய்யும் மோசடிகளால், தேர்தல் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை பாதிக்கிறது. தேர்தல் முறைகேடு என்பது விஷம் போன்றது என்று குறிப்பிடும் ராகுல், அடுத்து இது பிகாரில் நடக்கவிருக்கிறது. அதன்பிறகு பாஜக எங்கெல்லாம் தோற்கிறதோ அங்கெல்லாம் நடத்தப்படும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.