புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருமணமான பெண் வேறொரு இளைஞருடன் ஒரே வீட்டில் குடித்தனம்: கர்ப்பத்தில் சந்தேகம்; கழுத்தை நெரித்துக் கொலை!

திருமணமான பெண்ணுடன் லிவ்-இன் டுகெதர் உறவு... விபரீதத்தில் முடிந்தது!

News image
Updated On :8 ஜூன் 2025, 11:02 am

DIN

திருமணமான பெண்ணுடன் லிவ்-இன் டுகெதர் உறவு கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான நேபாளத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவர் அங்குள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் நேபாளத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பழக்கமாகி, நாளடைவில் நெருங்கிய தோழியானார். அந்த பெண்மணிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், மேற்கண்ட இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலிக்க தொடங்கியுள்ளனர்.

ஒருகட்டத்தில், அன்பின் மிகுதியால் அந்த பெண்மணி இந்த நபரை தேடி ஹைதராபாத் வந்துவிட்டார். இருவரும் ஒரே வீட்டில் லிவ்-இன் டுகெதர் உறவில் திருமணமாகாமலேயே குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த பெண்மணி மீண்டுமொருமுறை கர்ப்பம் தரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் அவருடன் தங்கியிருந்த நபருக்கு அந்த பெண் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த மே 23-ஆம் தேதி இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த அந்த நபர் அந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். அதன்பின், அவரது உடலை துணி அடைக்கும் பை ஒன்றில் அடைத்து ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வீசிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், இளம்பெண்ணின் சடலத்தைப் பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த காவலாளி ஒருவர், இது குறித்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறை அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிந்து, குற்றவாளியை கண்டுபிடிக்க 5 குழுக்களையும் அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டனர்.

சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்ததில் குற்றவாளியான விஜய் என்ற நபரை அடையாளம் கண்ட போலீஸார், மேட்செல் மாவட்டத்தில் பதுங்கியிருந்த அவரை தேடிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர் தாம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.