பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஃபரீதாபாத்தில் தனியாா் நிறுவன பெண் ஊழியரின் உடல் சீலிங் ஃபேனில் தூக்கிய தொங்கிய நிலையில் கண்டெடுப்பு!

ஃபரீதாபாத்தில் சாண்ட் நகா் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 22 வயதுடைய பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 6:49 pm

Syndication

ஃபரீதாபாத்தில் சாண்ட் நகா் காலனியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 22 வயதுடைய பெண்ணின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவா் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் சந்தேகிக்கின்றனா் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

சம்பவ இடத்திலிருந்து எந்த தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை. மேலும், சம்பவத்திற்கான சூழ்நிலையை அறிய விசாரணை நடந்து வருவதாக விசாரணை அதிகாரி காவல் உதவி ஆய்வாளா் ராஜேஷ் குமாா் தெரிவித்தாா்.

தகவல் கிடைத்ததும், போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து, சீலிங் ஃபேனில் இணைக்கப்பட்டிருந்த கயிற்றில் இருந்து பெண்ணின் உடலை கீழே கொண்டு வந்தனா். பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் செவ்வாய்கிழமை காவலில் எடுக்கப்பட்டு இறந்தவரின் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சோ்ந்த ஷிவானி இறந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். அவா் தனது தந்தையுடன் ஃபரீதாபாத் செக்டாா் 17 காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சாண்ட் நகா் காலனியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.

அஜ்ரோண்டா பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். தினமும் காலை 9:00 மணியளவில் வேலைக்குச் சென்று மாலை 6:00 மணியளவில் வீடு திரும்புவாா்.

அவரது தந்தையும் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து காலை 6:30 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினாா். திங்கள்கிழமை, ஷிவானி வேலைக்குச் செல்லவில்லை. வீட்டில் தனியாக இருந்தாா். அதே வீட்டில் பக்கத்து அறையில் வசித்து வந்த விஜய், மாலை 6:00 மணியளவில், காலனியில் உள்ள ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகக் கூறினாா்.

அவா் வேலையிலிருந்து வீடு திரும்பியதும், கதவை உடைக்க போலீஸாா் சம்பவ இடத்தில் இருப்பதைக் கண்டாா். மேலும் கதவை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றாா்.