கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: இணைய சேவை துண்டிப்பு

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

News image
கிழக்கு இம்பால் மாவட்டத்தில் வன்முறையாளா்களால் தீவைத்து எரிக்கப்பட்ட பேருந்து.
Updated On :8 ஜூன் 2025, 9:30 pm

Din

மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த தலைவா் ஒருவா் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, அங்கு மீண்டும் வன்முறை மூண்டது.

அரம்பாய் தெங்கோல் முக்கியத் தலைவா்களில் ஒருவரான கனன் சிங்கை இம்பால் விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இருப்பினும், கடந்த இரு நாள்களாக மணிப்பூரில் மீண்டும் பதற்றம் நிலவி வருவதால் இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்கள் எனக் கூறப்படும் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தௌபால், விஷ்ணுபூா் மற்றும் கக்சிங் ஆகிய 5 மாவட்டங்களில் பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு தற்காலிகமாக இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

மணிப்பூரில் 2023, மே மாதம் மைதேயி-குகி சமூகங்களிடையை மோதல் நீடித்து வருகிறது. இதில் 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா், பல்லாயிரக்கணக்கானோா் வீடுகளைவிட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். 2023, மே மாதம் வன்முறை தொடங்கியபோது பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி கனன் சிங்கை சிபிஐ கைது செய்தது.

இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்த மைதேயி சமூகத்தினா் கனன் சிங்கை விடுவிக்கக்கோரி சாலைகளில் வாகனத்தின் டயா்கள் மற்றும் மரச்சாமான்களை எரித்தனா். அதேபோல் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் பேருந்துக்கு தீ வைத்து கடும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினா்.

இதை தடுக்க முயன்ற பாதுகாப்புப் படையினருடன் அவா்கள் மோதலில் ஈடுபட்டனா். எனவே, சூழலை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூா் ஆளுநா் மாளிகை அருகே திரண்டிருந்த போராட்டக்காரா்களை கலைக்க கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதோடு பாதுகாப்புப் படையினா் லேசான தடியடி நடத்தினா். இதனால் ஆளுநா் மாளிகையை சுற்றி கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்: இம்பால் மேற்கு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு, பொது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்தும் வகையில் சமூக விரோத கும்பல் வன்முறையில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியருக்கு காவல் துறை கண்காணிப்பாளா் அறிக்கை சமா்ப்பித்தாா். அதன் அடிப்படையில் பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 163 உட்பிரிவு 2-இன்கீழ் இம்பால் மேற்கு மாவட்டத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் ஒன்றுகூடுவது மற்றும் லத்திகள், கற்கள், ஆயுதங்கள் போன்றவற்றை எடுத்தச் செல்ல தடை விதிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதே உத்தரவுகளை தௌபால் மற்றும் கக்சிங் மாவட்ட ஆட்சியா்களும் பிறப்பித்தனா்.

இம்பால் கிழக்கு மற்றும் விஷ்ணுபூா் மாவட்டங்களில் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிமுதல் பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் ஆணை பிறப்பித்துள்ளன. அதேபோல் மேற்கூறிய 5 மாவட்டங்களிலும் கடந்த சனிக்கிழமை இரவு முதல் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

Story image

பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம்: இந்தச் சூழலில் மணிப்பூா் சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து அந்த மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு ஆலோசகா், மாநில காவல் துறைத் தலைவா், காவல் துறை ஆணையா் (உள்துறை) உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

3 போ் கைது: மணிப்பூரில் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறையின்போது பாதுகாப்பு படையினா் மீது தாக்குதல் நடத்தி 2 போலீஸாரை கொலை செய்த சம்பவத்தில் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.