பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய பொருளாதார வளர்ச்சி: யோகி ஆதித்யநாத்!

வம்ச அரசியலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்..
முதல்வர் யோகி ஆதித்யநாத்
முதல்வர் யோகி ஆதித்யநாத்
Published on
Updated on
1 min read

பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய உலகின் ஒரே பொருளாதாரம் இந்தியா என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது,

2014-க்கு முன்பு நாம் பலவீனமான மற்றும் நிலையற்ற பொருளாதாரமாக இருந்தோம்.

பத்தாண்டுகளுக்கு முன்பு 11-வது இடத்திலிருந்த இந்தியா, இப்போது நான்காவது இடத்துக்கு வந்திருப்பதாகப் பலரும் பெருமைப்பட்டனர். உலகின் பல நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும்போது இந்தியாவின் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியபோது, ​​கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்ட பிரிட்டனை நாம் விஞ்சியுள்ளோம். பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய ஒரே பொருளாதார நாடு இந்தியாதான்.

இந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் தனிநபர் வருமானமும் இரட்டிப்பாகியுள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன. இந்தியா 2027ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கணித்துள்ளது.

வம்ச அரசியல் நாட்டின் சமூக ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கிறது. வரலாற்றின் தவறுகளை மீண்டும் செய்வதையும், நமது சுதந்திரத்தை மீண்டும் இழப்பதையும் தவிர்க்க வம்ச அரசியலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

2014-க்கு முன்னர் இந்தியா அமைதியை ஆதரித்தது என்ற இயல்பை தற்போது மாற்றியுள்ளோம். நமது நாட்டில் பயங்கரவாதத்தைத் தூண்டினால், அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று பஹல்காம் தாக்குதல் மூலம் உணர்த்தியுள்ளோம் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com