மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

விமானத்தில் பயணித்த வெளிநாட்டவர் எத்தனை பேர்? ஏர் இந்தியா தகவல்!

விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்கள் விவரம்...

News image

விபத்துக்குள்ளான விமானத்தின் பாகம். - PTI

Updated On :12 ஜூன் 2025, 10:20 am

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் 61 வெளிநாட்டவர்கள் பயணம் செய்ததாக விமான நிறுவனம் உறுதி செய்துள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் 242 பேர் பயணித்ததாக முதல்கட்டத் தகவல்கள் வெளியான நிலையில், விபத்தின் விவரங்கள், பயணிகளின் எண்ணிக்கையை ஏர் இந்தியா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

”ஆமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் இன்று விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிபடுத்துகிறது.

ஆமதாபாத்தில் இருந்து பிற்பகல் 13.38 மணிக்கு புறப்பட்ட போயிங் 787-8 ரக விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர்.

இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், ஒரு கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர் ஆவர்.

காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு 1800 5691 444 என்ற பிரத்யேக அவசர எண்ணை நாங்கள் அமைத்துள்ளோம்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது.” எனக் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.