மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

விமான விபத்து வேதனை அளிக்கிறது! பிரிட்டன் பிரதமர் பதிவு!

குஜராத் விமான விபத்து குறித்து பிரிட்டன் பிரதமர் வேதனை..

News image

கியெர் ஸ்டார்மர் - AP

Updated On :12 ஜூன் 2025, 10:47 am

ஆமதாபாத் விமான விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக பிரட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மர் பதிவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் பயணித்த 53 பிரிட்டன் நாட்டினர் உள்பட 242 பயணிகள் பயணம் செய்ததை ஏர் இந்தியா நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில், விபத்து குறித்து பதிவிட்டுள்ள பிரிட்டன் பிரதமர்,

”பிரிட்டனைச் சேர்ந்த பலருடன் இந்தியாவின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளான காட்சிகள் அதிர்ச்சியும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலை குறித்து எனக்கு தொடர்ந்து தகவல்கள் அளித்து வருகின்றனர். இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.