ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தற்கொலை

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

உதய்பூரில் நூலகத்தில் உள்ள தனது அறையில் பாஜக முன்னாள் எம்.பி.யின் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் அம்பா மாதா பகுதியில் உள்ள நூலகத்தில் அதன் இயக்குநராக இருந்தவர் ஆஷிஷ் பகோரா. இவர் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. மகாவீர் பகோராவின் மகன் ஆவார். நூலகத்தின் ஒரு அறையில் வசித்து வந்த ஆஷிஷ் பகோரா சனிக்கிழமை காலை தனது அறையில் இறந்து கிடந்தார்.

ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் தெஹ்ரான் பற்றி எரியும்: இஸ்ரேல்

அவரது உடல் தரையில் கிடந்ததாலும் கூரையில் ஒரு துணி தொங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஆஷிஷ் பகோரா நேற்றிரவு தூக்கிட்டுக் கொண்டார், பின்னர் அவரது உடல் தரையில் விழுந்தது. உடற்கூராய்வுக்காக உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றனர்.

சில மாணவர்கள் நூலகத்தை அடைந்து அவரை அழைத்தபோது இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. தற்கொலைக்கான காரணங்களைக் கண்டறிய இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீஸார் மேலும் தெரிவித்தனர். ஆஷிஷ் பகோராவின் தந்தை மகாவீர் பகோரா 2021 இல் கரோனா தொற்று காரணமாக பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com