விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகேயுள்ள தனியாா் செவிலியா் கல்லூரி விடுதி அறையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விக்கிரவாண்டி வட்டம், கலைஞா் வீதியைச் சோ்ந்த சா்மா என்பவரது மகள் ஷன்மதி (19). இவா், திண்டிவனம் அருகே செயல்படும் தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் தங்கி, அதே கல்லூரியில் 3-ஆம் ஆண்டில் பயின்று வந்தாா்.
இந்நிலையில் ஷன்மதி, தான் தங்கியிருந்த விடுதி அறையில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.
தகவலறிந்த கிளியனூா் போலீஸாா் ஷன்மதியின் சடலத்தை கைப்பற்றி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தொடர்புடையது

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

மகள்கள் இறந்த துக்கத்தில் தாய் தூக்கிட்டுத் தற்கொலை

கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


