இனிமேல் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்: டேவிட் வார்னர்

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னரின் சர்ச்சையாகி வரும் கருத்து குறித்து...
Air India Flight, david Warner
ஏர் இந்தியா விமானம், டேவிட் வார்னர்.கோப்புப் படங்கள்.
Updated on
1 min read

முன்னாள் ஆஸி. வீரர் டேவிட் வார்னர் தான் இனிமேல் ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க மாட்டேன் எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மருத்துவமனை மாணவர்கள் உள்பட விமானத்தில் பயணித்தவர்களில் (241+1) ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பலியாகினர். பலி எண்ணிக்கை இன்றுடன் (ஜூன்.14) 270-ஐ தாண்டியுள்ளது.

ஏர் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பலரும் சமூக வலைதளத்தில் விமர்சனங்களை முன்வைக்கும் நிலையில் டேவிட் வார்னர் கூறியதை சர்ச்சையாகி வருகிறது.

ஏர் இந்தியாவில் பயணிக்கமாட்டேன் - வார்னர் முடிவு

சமூக வலைதளத்தில் ஒருவர் பதிவிட்ட பதிவினைப் பகிர்ந்த டேவிட் வார்னர், “இனிமேல் நான் ஏர் இந்தியாவில் பயணிக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

டேவிட் வார்னர் பகிர்ந்த பதிவில் என்ன இருந்தது?

நான், ஏர் இந்தியாவின் முன்னாள் விமான குழுவினைச் சேர்ந்தவன். நான் இதில்தான் வழக்கமாகப் பயணிப்பேன். நீண்ட காலமாகவே இந்த ஏர் இந்தியா பிரச்னையில் இருக்கிறது. நிஜமாகவே பல ஆண்டுகள்.

பயணிகள், விமானிகள், என்ஜினியர்கள் என அனைவருமே இதை லாக் புத்தகத்தில் எழுதியுள்ளார்கள். ஆனால், இந்த நிறுவனம் தனது மதிப்புமிக்க காட்விக் செக்டார் பகுதிகளில் இதற்கு மாற்றாக எந்த விமானத்தையும் வைக்கவில்லை. அதனால்தான், நாம் இந்த விமானத்திலேயே பயணிக்க வேண்டியுள்ளது.

எனக்கும் இதே மாதிரி நடந்துள்ளது. நானும் என்ஜின் பழுதினால் பாதிக்கப்பட்டேன். நல்ல வேளையாக நாங்கள் தப்பினோம்.

ஊழியர்கள் அல்ல, நிர்வாகத்தின் தவறுதான். இதைப் பொதுவெளியில் பேசாமல் நிர்வாகம் மிரட்டுகிறது. இதற்குப் பொறுப்பேற்காமல் ஊழியர்கள் மீது குற்றம் சுமத்துகிறது எனக் கூறப்படிருந்தது.

David warner
டேவிட் வார்னர் பகிர்ந்த பதிவு.படம்: இன்ஸ்டா / டேவிட் வார்னர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com