லிமாஸ்ஸோல்[சைப்ரஸ்] : சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருக்கிறாா்.
கனடாவில் நடைபெறும் ஜி7 நாடுகளின் உச்சிமாநாட்டில் அவா் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளாா். இதற்காக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) சைப்ரஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி.
பிரதமர் வருகையையொட்டி சைப்ரஸின் லார்னாகா விமான நிலையத்தில் சைப்ரஸ் அதிபர் நிகோஸ் க்றிஸ்டோடௌலிடெஸ் வரவேற்றார்.
இதனிடையே, சைப்ரஸில் பிரதமரைக் காண திரண்டிருந்த இந்திய வம்சாவளி மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். குடும்பமாக திரண்டிருந்த மக்கள் கைகளில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி நின்று வரவேற்றனர்.
அங்கு திரண்டிருந்த குழந்தைகள் ஏந்தியிருந்த பதாகைகளில் ‘நவீன இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது.

சைப்ரஸில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு - ANI
சைப்ரஸ் அதிபர் நிகோஸ் க்றிஸ்டோடௌலிடெஸுடன் பிரதமர் மோடி நாளை(ஜூன் 16) இருநாட்டு உறவுகள் குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பேச்சு

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு... பிரதமர் மோடி முக்கிய வேண்டுகோள்!

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


