கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான முதல் குழு சிக்கிம் வந்தடைந்தது..
Kailash Mansarovar Yatra
சிக்கிம் வந்தடைந்த முதல் குழு
Published on
Updated on
1 min read

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது.

இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுகளாக கைலாஷ் மானசரோவர் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்த யாத்திரை ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறும். கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்குச் செல்லும் புனிதப் பயணமாகும்.

சுற்றுலா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சி.எஸ். ராவ் கூறுகையில்,

மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பாக்டோக்ரா விமான நிலையத்தில் தரையிறங்கி 36 பேர் கொண்ட குழு சாலை வழியாக கேங்டாக்கை அடைந்தனர். அவர்களை ரெனாக்கில் உள்ள சுற்றுலா மேம்பாட்டுக் கழக அதிகாரிகளால் வரவேற்றனர்.

இந்தாண்டு யாத்திரைக்காக 750 இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 500 பேர் நாது லா பாதை வழியாக 10 குழுக்களாகவும், 250 பேர் உத்தரகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும் பயணம் செய்தனர்.

இதனிடையே முதல் யாத்திரை குழு ஞாயிற்றுக்கிழமை இரவு கேங்டாக்கில் தங்கி திங்கள்கிழமை யாத்திரைத் தொடங்கியது.

அவர்கள் ஜூன் 16ல் அன்று 17 மைலில் தங்கி, பின்னர் ஜூன் 20 அன்று இந்தியா-சீன எல்லையைக் கடப்பதற்கு முன்பு செராதாங்கிற்குச் செல்வார்கள்.

நாது லா-கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது அரசு அடிப்படையிலான யாத்திரையாகும். மேலும் சிக்கிம் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் முழு யாத்திரைக்கும் பொறுப்பேற்கும்.

மேலும், கேங்டாக்கிலிருந்து கைலாஷ் மலை, மானசரோவர் ஏரிக்குப் பக்தர்களின் பயணத்தை சிக்கிம் சுற்றுலாத்துறை கவனித்துக் கொள்ளும் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com