பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது பற்றி...
Prime Minister Modi receives Cyprus' highest award
பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது PTI
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றார்.

இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடா்பாக, தலைநகா் நிகோசியாவில் சைப்ரஸ் அதிபா் நிகோஸ் கிறிஸ்டோடெளலிடிஸ் மற்றும் பிரதமர் மோடி இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில், இருநாட்டு உறவின் அடையாளமாக சைப்ரஸ் நாட்டின் உயரிய ’கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III’ விருதை அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டோடெளலிடிஸ், பிரதமர் மோடிக்கு அளித்து கெளரவித்தார்.

சைப்ரஸ் பயணத்தை இன்று முடித்துவிட்டு, அங்கிருந்து கனடாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, கனனாஸ்கிஸ் நகரில் ‘ஜி7’ உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளாா்.

கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பின்பேரில் மாநாட்டில் பங்கேற்கும் பிரதமா், பல்வேறு நாடுகளின் தலைவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பின்னா், குரோஷியாவில் ஜூன் 18-இல் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் அதிபா் ஸோரன் மிலனோவிச், பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளாா். இதன்மூலம் குரோஷியாவுக்கு பயணிக்கும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com