
ஹஜ் பயணிகளை லக்னௌவிற்கு அழைத்து வந்த விமானத்தில் கரும்புகை கண்டறியப்பட்டதையடுத்து பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர்
242 ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற சௌதியா ஏர்லைன்ஸ் ஜெட்டா-லக்னௌ விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் சக்கரங்களிலிருந்து கரும்புகை வெளியேறியதை அடுத்து விமான நிலையத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை காலை நகரின் சௌத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது. மேலும் விமானத்தில் இருந்த 242 பயணிகளும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். விமானத்திற்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஜெட்டாவிலிருந்து 242 ஹஜ் பயணிகளை அழைத்துவந்த சௌதியா விமானத்தின் சக்கரங்களிலிருந்து கரும்புகை வெளியேறியது கண்டறியப்பட்டதையடுத்து, விமான மீட்பு மற்றும் தீயணைப்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. சௌதியா குழுவுடன் இணைந்து பணியாற்றி, கரும்புகை கட்டுப்படுத்தப்பட்டது மற்றும் விமானத்திற்கு ஏற்பட்ட சேதம் தவிர்க்கப்பட்டது.
விமான நிலைய நடவடிக்கைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சௌதியா விமானம் சரிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று அதன் இலக்கை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








