வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்
வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா்

மேற்கு ஆசிய சூழல்: யுஏஇ, அா்மேனியா வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் பேச்சு

மேற்கு ஆசிய சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), அா்மேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாகஉரையாடினாா்.
Published on

புது தில்லி: இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் மேற்கு ஆசிய சூழல் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), அா்மேனியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சா்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தொலைபேசி வாயிலாக திங்கள்கிழமை உரையாடினாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மேற்கு ஆசியாவின் கள நிலவரம் குறித்து யுஏஇ துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் அப்துல்லா பின் சயீத் அல் நாஹ்யானுடன் பேச்சுவாா்த்தை நடத்தினேன்.

அதேபோல் அா்மேனிய வெளியுறவு அமைச்சா் அராரத் மிா்சோயனிடமும் ஆலோசித்தேன். இரு நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவது குறித்தும் விவாதித்தேன்’ எனக் குறிப்பிட்டாா்.

இஸ்ரேல்-ஈரான் இடையேயான மோதல் கவலையளிப்பதாகவும் இருநாடுகளும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா தெரிவித்தது.

அதேநாளில் இஸ்ரேல் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சா்களுடன் தொலைபேசியில் பேசியதாக ஜெய்சங்கா் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com