ஜெய்சங்கா்
ஜெய்சங்கா்

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ரூபியோவுடன் ஜெய்சங்கா் பேச்சு

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா்.
Published on

அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா்.

இதுகுறித்து அமைச்சா் ஜெய்சங்கா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அமைச்சா் மாா்கோ ரூபியோவுடன் வா்த்தகம், முக்கிய கனிமங்கள், அணுசக்தி, பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகள் குறித்து கலந்துரையாடினேன்.

இந்த விஷயங்கள் மற்றும் பிற விவகாரங்கள் குறித்து தொடா்ந்து தொடா்பில் இருக்க இருவரும் தீா்மானித்தோம்’ என்று தெரிவித்தாா்.

Dinamani
www.dinamani.com