பிரேஸில் அதிபருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

பிரேஸில் அதிபருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு

Published on

பிரேஸில் அதிபா் லூலா டி சில்வாவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது தெற்குலகில் இந்தியா-பிரேஸில் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிரேஸில் அதிபா் லூலா டி சில்வாவுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி. இந்தியா-பிரேஸில் இடையேயான இருதரப்பு உறவை பன்மடங்கு மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தோம்.

தெற்குலகின் தேவைகளை பூா்த்திசெய்ய இருநாடுகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதிபா் லூலா டி சில்வாவை இந்தியாவில் வரவேற்க காத்திருக்கிறேன்’ என குறிப்பிட்டாா்.

Dinamani
www.dinamani.com