ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா?

இஸ்ரேல் - ஈரான் சண்டையால் பெட்ரோல் தட்டுப்பாடு வருமா என்பது பற்றி

News image

இஸ்ரேல் - ஈரான் ஏவுகணைத் தாக்குதல் - AP

Updated On :17 ஜூன் 2025, 1:08 pm

மேற்கு ஆசிய நாடுகளான இஸ்ரேல் - ஈரான் சண்டையால், தற்போதைக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இல்லை என்று மத்திய அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச சந்தையில், எரிபொருள் தேவைக்கு அதிகமாகவே இருப்பில் உள்ளதாகவும், உடனடியாக உலக நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் நிலை இல்லை எனவும் அந்த தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

எண்ணெய் மற்றும் பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் பேரல்களை உற்பத்தி செய்து வருகின்றன. தற்போது, இதில் 5 மில்லியன் பேரல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் 97 தற்போதும் நாள் ஒன்றுக்கு 97 மில்லியன் பேரல்கள் உற்பத்தியாகின்றன. இவை மட்டுமல்லாமல், ஏராளமான எரிபொருள் வழங்கும் நாடுகள் உள்ளன. அவை தேவைக்கு ஏற்ப எரிபொருளை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு எரிபொருள் வழங்கும் பணியானது, கடல் வழியில் தடையின்றி நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கு நாள் ஒன்றுக்கு 5.6 மில்லியன் பேரல்கள் தேவைப்படும் நிலையில், தற்போது போர் நடைபெற்று வரும் பகுதி வழியாக இந்தியாவுக்கு வெறும் 1.5 முதல் 2 மில்லியன் பேரல்கள்தான் வருகின்றன.

மேலும், இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக 27 நாடுகளிலிருந்து எரிபொருள் வாங்குவதை தற்போது 40 நாடுகள் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. எனவே, நாட்டின் எரிபொருள் தேவை என்பது மிகவும் பாதுகாப்பாகவே உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.